ஜமாலின் திட்டங்களுக்குப் பிரதமர் முடிவு கட்ட வேண்டும்: கெராக்கான் இளைஞர் பகுதி கோரிக்கை

gerakanபிரதமர்     நஜிப்   அப்துல்    ரசாக்   சிகப்புச்   சட்டை   இயக்கத்   தலைவர்     ஜமால்    முகம்மட்    யூனுசின்   திட்டங்களுக்கு  ஒரு   முடிவு   கட்ட    வேண்டும்    என   கெராக்கான்   இளைஞர்   பகுதி      கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த    இயக்கத்துக்கும்     அம்னோவுக்கும்      தொடர்பில்லை     என்று   ஜமாலும்   சில   அம்னோ    தலைவர்களும்    கூறிக்கொண்டாலும்   ஜமால்   சுங்கை   புசார்   அம்னோ   தொகுதித்    தலைவர்    என்பதை     கெராக்கான்  இளைஞர்    துணைத்    தலைவர்    எண்டி    யோங்    சுட்டிக்காட்டினார்.

“அந்த  வகையில்    அம்னோ   தலைவரால்    சுங்கை   புசார்    தொகுதித்    தலைவர்மீது   நடவடிக்கை   எடுக்க   முடியும்.

“அதேபோன்று   அதில்   சம்பந்தப்பட்ட    மற்ற  அம்னோ    உறுப்பினர்கள்மீதும்     நடவடிக்கை    எடுக்கலாம்”,  என   அவர்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

எந்தத்   தரப்பினருக்கும்   ஒன்றுகூடவும்    சட்டப்பூர்வமாக    ஆர்ப்பாட்டம்    செய்யவும்   உரிமை   உண்டு   ஆனால்,   சிகப்புச்   சட்டை  இயக்கத்தினர்    வன்செயல்களில்   ஈடுபடுவதை    யோங்    சுட்டிக்காட்டினார்.

நேற்று  யோங்,    கெராக்கான்     இளைஞர்    குழு    ஒன்றுடன்    போலீஸ்   நிலையம்    சென்று    முகநூலில்   மே  13  மீண்டும்    நடக்கும்   என்று  எச்சரிக்கப்பட்டிருப்பது    குறித்து    புகார்   செய்தார்.    முகநூலில்  அப்பதிவைச்   இட்டவர்   ஜமால்தான்   என்று   கூறப்படுகிறது.

ஜமால்   அதை   மறுத்தாலும்    போலீஸ்   அது   குறித்து   விசாரணை   செய்ய  வேண்டும்    என்று  யோங்  கூறினார்.
அது    மட்டுமல்லாமல்,   அண்மையில்   தெலோக்   இந்தான்,  சாபாக்  பெர்னம் ,   பினாங்கின்   கர்னி  டிரைவ்    ஆகிய   இடங்களில்   பெர்சே    5  வாகன   அணிகள்மீது   சிகப்புச்   சட்டையினர்   நடத்திய   தாக்குதல்   தொடர்பிலும்   போலீசார்    நடவடிக்கை    எடுக்க    வேண்டும்   என்றவர்    வலியுறுத்தினார்.