ஆட்சியாளர்கள் நிர்வாகத்தில் தலையிட மாட்டார்கள்- தெங்கு அட்னான்

adnanபிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து   நீக்கக்  கோரும்   குடிமக்கள்   பிரகடனம்   ஆட்சியாளர்    மன்றத்துக்கு    அனுப்பப்பட்டிருந்த   போதிலும்    ஆட்சியாளர்கள்   நாட்டு  நிர்வாகத்தில்  தலையிடும்   வாய்ப்பு  குறைவு   என்கிறார்   கூட்டரசுப்  பிரதேச    அமைச்சர்    தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்.

“முன்னாள்     பிரதமர்    டாக்டர்   மகாதிர்   முகம்மட்    நேரில்   சென்று  சந்தித்தும்   அவ்விவகாரத்தில்    தலையிடப்போவதில்லை   என்பதைப்   பேரரசர்   ஏற்கனவே    தெரிவித்து   விட்டார்.

“அதேபோல்   ஆட்சியாளர்  மன்றமும்   தலையிடாது   என்றே  நம்புகிறேன்.  சட்டத்தைப்  பின்பற்ற    வேண்டும்    என்பதை    ஆட்சியாளர்கள்    அறிவார்கள்.  நாம்   அரசமைப்புப்படியான   முடியாட்சி   என்பதை   மறந்து   விடக்கூடாது.  நாம்  அரசமைப்பைப்  பின்பற்றியே   ஆட்சி   நடத்துகிறோம்”,  என்றாரவர்.