நிதி அமைச்சர் II பதவியிலிருந்து விலகிய பிறகு அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா பெரும்பாலும் அரசியல் பேசுவதைத் தவிர்த்து வருகிறார்.
ஆனாலும் அவர் அம்னோவிலிருந்து பிரிந்தவர்களால் அமைக்கப்பட்ட பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் சேரப்போகிறார் என்று வதந்திகள் உலவுகின்றன.
இது உண்மையா என்று மலேசியாகினி ஹுஸ்னியிடம் வினவியதற்கு, “நான் அரசியல் பேச விரும்பவில்லை”, என்றார்
ஹுஸ்னி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கும் முன்னர் ஜூன் 27-இல் பதவி விலகினார்.
அம்னோவில் வகித்த எல்லாப் பதிவிகளையும் அவர் துறந்தார். ஆனால், தம்புன் எம்பி-ஆக மட்டும் இருக்கிறார்.
அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக ஹுஸ்னி தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தில் யாரையும் பாதிக்காது மனம் விட்டுப் பேசுவேன். ”, என்றார்.