ஜமாலின் செயல்கள் அம்னோவைப் பிரதிபலிக்க மாட்டா- நஸ்ரி

nazriசுங்கை  புசார்   அம்னோ   தொகுதித்   தலைவர்     ஜமால்   முகம்மட்   யூனுசின்  சொல்லும்   செயலும்   அம்னோவைப்  பிரதிபலிப்பதாகக்   கருதக்  கூடாது   என்பதைச்   சுற்றுலா,  பண்பாட்டு  அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசீஸ்       மீண்டும்  வலியுறுத்தினார்.

ஜமால்   தனிப்பட்ட   முறையில்தான்    பேசுகிறார்,  செயல்படுகிறார்  என்று   நஸ்ரி   கூறியதாக   அஸ்ட்ரோ   அவானி   அறிவித்தது.

198   கட்சித்   தொகுதிகள்   உள்ளன.  அவற்றில்    ஒன்றுக்குத்   தலைவர்தான்  ஜமால்.  அவரது   சேட்டைகளை   வைத்து     எல்லாத்    தொகுதித்   தலைவர்கள்மீதும்   பழி   போடுவது   நியாயமல்ல    என்று  நஸ்ரி    கூறினார்.

“அவர்   என்ன   செய்கிறாரோ   அது   எங்களைப்  பிரதிபலிக்கவில்லை.  ஒரு  மனிதர்    மற்ற    197   தொகுதித்    தலைவர்களுக்காகவும்   பேச  முடியாது”.

யாராக   இருந்தாலும்    சட்டத்தை   மீறக்  கூடாது   என்பதையும்   நஸ்ரி  அழுத்தம்   திருத்தமாக   வலியுறுத்தினார்.

“சட்டத்தை   மீறினால்    நடவடிக்கை    எடுக்கத்தான்   வேண்டும்”,  என்றாரவர்.