‘காதில் பூ சுற்ற வேண்டாம், நேரடிப் பதில் தேவை’: 1எம்டிபி நிகழ்வில் மாணவர்கள் கூச்சல்

studentமலாயாப்  பல்கலைக்கழகத்தில்   நடைபெற்ற    1எம்டிபி   விளக்கக்  கூட்டத்தில்    அந்நிறுவனத்தின்   தலைவர்    அருள்  கண்ட   கந்தசாமி   விளக்கமளித்து  முடித்த   பின்னர்    பல   மாணவர்கள்   எழுந்து   நின்று   1எம்டிபி   ஊழல்   தொடர்பில்  தங்களுக்கு    நேரடிப்  பதில்  தேவை   என்று  முழக்கமிட்டனர்.

இரவு   11.15   அளவில்   அந்நிகழ்வு   முடிவுக்கு   வரவிருந்த   நேரத்தில்   நான்கு  மாணவர்கள்   எழுந்து    நின்றனர்.  அவர்கள்  கைகளில்    அறிவிப்பு   அட்டைகளை   ஏந்தியிருந்தனர்.

அவற்றில்  ‘மாணவர்களுக்குப்  பதில்கள்  தேவை’,  ‘1எம்டிபி   பற்றி   காதில்  பூ  சுற்ற    வேண்டாம்’, ‘1எம்டிபி-  மக்களின்  பணத்தைத்  திருப்பிக்  கொடு’,  ‘1எம்டிபி-  எங்களுக்குப்   பதில்கள்   தேவை’  என்று  எழுதப்பட்டிருந்தன.

உடனே  சிலர்   பாய்ந்து    சென்று   மாணவர்கள்  வைத்திருந்த   அட்டைகளைப்  பிடுங்கிக்  கிழித்தெறிந்தனர்.  நிகழ்ச்சி   நடத்துனர்   துன்  பைசல்   இஸ்மாயில்  அசீசும்   கடிந்து   கொண்டார்.

“இது  அநாகரிகமான   செயல்,  இனி   வரும்  விளக்கக்  கூட்டங்களில்   இப்படி  நிகழக்கூடாது”,  என்றார்.

அந்த  விளக்கமளிப்பு   நிகழ்வுக்கு    தொடர்பு,  பல்லூடக   அமைச்சின்   சிறப்பு   விவகாரப்  பிரிவு (ஜாசா)   ஏற்பாடு   செய்திருந்தது.