அடுத்த பொதுத் தேர்தலில் பார்டி அமனா நெகரா( அமனா) பேராக்கின் 59 சட்டமன்ற இடங்களில் 22-க்குப் போட்டியிடத் திட்டமிடுகிறது.
“பேராக் அமனா போட்டியிடுவதற்குப் பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டிருக்கிறது. அது குறித்து பேராக் பக்கத்தான் ஹராபானிடம் தெரிவிக்கும்.
“14வது பொதுத் தேர்தலில் 22 சட்டமன்ற இடங்களில் போட்டியிட அமனா தயாராகவுள்ளது”, அக்கட்சியின் பேராக் மாநிலத் தலைவர் அஸ்முனி அவி கூறினார்.
எந்தெந்த இடங்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அவை பெரும்பாலும் பாஸுடன் தொடர்புள்ள இடங்களாகத்தான் இருக்கும். கடந்த பொதுத் தேர்தலில் பாஸும் பேராக் சட்டமன்றத்துக்கு 22 இடங்களில்தான் போட்டியிட்டது.
பேராக்கில் நிலா கட்சி தேய்பிறை நிலாவானது! அடுத்தத் தேர்தலுக்குப் பின் அது அமாவசையாகும்.