ஜமாலையும் சிகப்புச் சட்டையினரையும் பிரதமர் கண்டிக்க வேண்டும்: என்ஜிஓ-கள் கோரிக்கை

ngoபிரதமர்     நஜிப்    அப்துல்   ரசாக்    சுங்கை  புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்   முகம்மட்    யூனுசையும்   அவருடைய   சிகப்புச்   சட்டைக்  கூட்டத்தையும்   கண்டிக்க   வேண்டும்    என   13  அரசு-சார்பற்ற     அமைப்புகளின்(என்ஜிஓ)    குழு    ஒன்று     கேட்டுக்கொண்டிருக்கின்றது.

பெர்சத்துவான்   அலிரான்    கெசெடாரான்  நெகரா(அலிரான்),   சுவாராம்,   பூசாட்   கோமாஸ்,    தேசிய   மனித   உரிமைக்  கழகம்  போன்ற  அமைப்புகள்   அக்குழுவில்    இடம்பெற்றுள்ளன.   ஜமால்    சட்டங்களிலிருந்து   விலக்குப்பெற்றவர்   போன்றும்   சட்டத்துக்கு   அப்பாற்பட்டவர்   போன்றும்    நடந்து  கொள்கிறார்   என்று   அது  கூறிற்று.

“ஜமால்  முகம்மட்  யூனுசுக்கும்   சிகப்புச்   சட்டையினருக்கும்   பின்னணியில்   பெரியதொரு   அரசியல்    சக்தி    இருக்கிறதோ   என்ற  கவலை   எங்களுக்கு.  அவர்   யாராலும்   தொட   முடியாதவர்போலவும்   சட்டங்களுக்கு   அப்பாற்பட்டவர்   போலவும்    நடந்துகொள்கிறார்.

“பிரதமர்   சிகப்புச்  சட்டையினரின்    வன்செயல்களைப்  பகிரங்கமாகக்    கண்டித்து   ஜமால்   முகம்மட்  யூனுசுக்கும்    சிகப்புச்   சட்டையினருக்கு   எதிராக     நடவடிக்கை   எடுக்குமாறு   பணிப்பாரா?  பிரதமர்   இதற்குப்  பதிலளிக்க   வேண்டும்”,  என  அக்குழுவின்   பேச்சாளர்  சைட்   கமருடின்    கூறினார்.   அவர்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   என்ஜிஓ-களின்   கூட்டறிக்கையை  வாசித்தார்.