ஆட்சியாளர்கள் கூட்டத்தில் பேரரசர் பங்கேற்பு

agongஇன்று   கோலாலும்பூர்   இஸ்தானா   நெகராவில்   இரண்டாம்   நாளாக   நடைபெறும்    242ஆவது     ஆட்சியாளர்   கூட்டத்தில்    பேரரசர்   துவாங்கு   அப்துல்  ஹாலிம்    மு’வாட்சம்  ஷாவும்   கலந்து  கொண்டார்.

ஜோகூர்   சுல்தான்,  சுல்தான்    இப்ராகிம்   சுல்தான்   இஸ்கந்தர்     தலைமையில்     நடைபெறும்    அக்கூட்டத்தில்   பகாங்   சுல்தானைத்   தவிர்த்து    மற்ற    மாநில    ஆட்சியாளர்கள்   அனைவரும்    அவர்களின்   மந்திரி   புசார்களுடன்   கலந்து   கொண்டிருக்கிறார்கள்.

பினாங்கு,   மலாக்கா,    சாபா,  சரவாக்     ஆளுனர்களும்   அவர்களின்   முதலமைச்சர்கள்   உடன்வர     அக்கூட்டத்தில்    கலந்து  கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கும்   கூட்டத்துக்கு   வந்துள்ளார்.

ஆட்சியாளர்கள்   கூட்டம்   நாளை    நாட்டின்   15வது   பேரரசரைத்   தேர்ந்தெடுக்கும். இப்போதைய    பேரரசர்    துவாங்கு   அப்துல்  ஹாலிம்    மு’வாட்சம்  ஷாவின்      பதவிக்காலம்   டிசம்பர்   12-இல்  முடிவுக்கு  வருகிறது.  அவரது    இடத்துக்கு    இன்னொருவரைத்    தேர்ந்தெடுக்க   வேண்டும்.

மலேசியாவில்   கடைப்பிடிக்கப்படும்    சுழல்முறைப்படி   பார்த்தால்    கிளந்தான்   ஆட்சியாளர்   ஐந்தாம்   சுல்தான்   முகம்மட்-தான்   அடுத்த  மன்னராக   தேர்ந்தெடுப்பட    வேண்டும்.

நாளை   புதிய   பேரரசரைத்    தேர்ந்தெடுக்க    வாக்களிப்பு    நடைபெறும்.    எந்த   வேட்பாளருக்குக்    குறைந்தது   ஐந்து   வாக்குகள்   கிடைக்கிறதோ   அவரே   அடுத்த   மன்னராவார்.