ஒரு மணி நேரம் காத்திருந்தும் மோட்லியால் நஜிப்பைச் சந்திக்க முடியவில்லை

motleyஅமெரிக்க   வழக்குரைஞர்   கிம்பர்லி   மோட்லி  பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்கைச்   சந்திப்பதற்காக    இன்று   பிரதமர்துறைக்குச்  சென்றார்.

காலை   11.05க்குச்   சென்ற     அவர்    ஒரு  மணி  நேரம்    காத்திருந்தும்   நஜிப்பைச்   சந்திக்காமலேயே  திரும்பிச்   சென்றார்.

நஜிப்புக்கு  அலுவல்   அதிகம்   அதனால்  அவரைச்   சந்திக்க   முடியாது   என்று   அவரிடம்    தெரிவிக்கப்பட்டது.

இரண்டு   நாள்களுக்குமுன்   நஜிப்பைச்   சந்திக்க   அனுமதி   கேட்டு   அவர்    கடிதம்   எழுதியிருந்தார்.  ஆனால்,  அதற்குப்  பதில்   இல்லை.

“எனக்கு   ஏமாற்றம்தான்.  அவருக்கு   வேலை   அதிகம்     என்று   அறிகிறேன்.

“அதனால்   அவரைத்   தொந்திரவு   செய்ய  விரும்பவில்லை.  ஆனால்,  அடுத்த  சில    வாரங்களில்   சந்திக்க   முடியுமென்று    நம்புகிறேன்.  அவரிடம்    சிலவற்றை   விளக்கிச்  சொல்ல    வேண்டியிருக்கிறது”,  என்று   மோட்லி    பிரதமர்   துறைக்கு   வெளியில்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

மோட்லி,   சிறையில்   உள்ள    அன்வார்  இப்ராகிமின்    வழக்குகளைக்    கவனித்துக்கொள்ள   நியமிக்கப்பட்டிருக்கும்    அமெரிக்க  வழக்குரைஞர்.