ஆட்சியாளர் மன்றம் கிளந்தான் சுல்தான் ஐந்தாம் சுல்தான் முகம்மட்டை அடுத்த பேரரசராக தேர்ந்தெடுத்துள்ளது.
இப்போதைய பேரரசர் கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் மு’வாட்சம் ஷாவின் ஐந்தாண்டுப் பதவிக் காலம் டிசம்பர் 12-இல் முடிவுக்கு வந்ததும் சுல்தான் முகம்மட் அடுத்த பேரரசராக பதவி ஏற்பார்.
புதிய பேரரசரைத் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர் மன்றம் பேராக் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவை துணைப் பேரரசராக நியமித்தது.
வாழ்த்துக்கள். ஒருவர் சமய பின்னணி கொண்டவர். மற்றவர் தன் தகப்பனாரின் சிந்தனையில் வளர்ந்தவர் என்பதால் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப் பட வேண்டும் என்று நினைப்பவர். என்னதான் நடக்கின்றது என்று பார்ப்போம்.
முதல் தாடி வைத்த ஆட்சியாளர். காலம் சொல்லும்.