தன்னைக் கைது செய்து சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சிறைக்கு அனுப்பியதற்காக முன்னாள்- பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருடின் அபு ஹசான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
அதுதான் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சந்திக்கும் வாய்ப்பைத் தந்தது என்று நேற்றிரவு பினாங்கில் பெர்சே கூட்டமொன்றில் கைருடின் கூறினார்.
“ஒவ்வொரு நாளும் சந்திப்போம்.
“நிறையவே பேசினோம், திட்டமிட்டோம். முடிவில் குடிமக்கள் பிரகடனத்தைக் கொண்டுவரும் எண்ணம் தோன்றியது.
“அரசாங்கத்துக்கு நன்றி. அது மறைமுகமாக கிடைத்த வரம்”, என்றவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 23-இல், நாட்டுக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதற்காக கைருடின் கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்டார்.