மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் தம் பொறுப்புகள் என்னவென்பதை உணர்ந்திருக்கிறாரா என்பது மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) தலைமைச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணனுக்குப் புரியவில்லை.
எம்டியுசி நடப்புத் தொழிலாளர் சட்டங்களுக்குத் திருத்தங்களைப் பரிந்துரைத்து ஈராண்டுகள் ஆகின்றன. இன்னும் அமைச்சு எதுவும் செய்யவில்லை என்றாரவர்.
“இரண்டாண்டுகள் ஆகின்றன, மனிதவள அமைச்சு (உத்தேச பரிந்துரைகளை) பெற்றுக்கொண்டதாகக் கூறி. இன்னமும் ஆராய்கிறார்கள்.
“இதற்கிடையில், மூன்று தடவை அமைச்சின் தலைமைச் செயலாளர் மாறிவிட்டார். நாங்கள் அனுப்பிவைத்த ஆவணம் அப்படியேதான் இருக்கிறது”, எனக் கோபாலகிருஷ்ணன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இது தொழிலாளர்களின் அவலத்தைக் கேட்டறிவதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது என்றாரவர்.
மனித வள அமைச்சர் இன்னும் பிற வளங்கள் இல்லாமல் இருக்கலாம்
JPM EPU PEMADAM போன்ற சலுகைகள் இட்ரிஸ் Jalal KPI பார்க்கலாம்?
அவனுங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதனால் வருமானாமும் லாபமும் இருக்கிறது. உள்நாட்டு தொழிலாளர்களை கவனிக்க நேரமும் இல்லை அதனால் அவனுங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லையே..