‘கெலிங்’ மற்றும் ‘பென்டாத்தாங்’ போன்ற இழிவுபடுத்தும் சொற்களை இந்திய சமூகத்தின் மீது பயன்படுத்தப்படுவதை தாம் விரும்பவில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.
மஇகாவின் 70 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மக்களிடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும் என்றார்.
“இந்தியர்களைப் ‘பென்டாத்தாங்’ என்றும் ‘கெலிங்’ என்றும் கூப்பிட வேண்டாம். நான் இதை விரும்பவில்லை. தயவு செய்து, வேண்டாம்” என்றாரவர்.
“நாடு ஒன்றுபட்டிருந்தால் உண்மையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும்…எதிரணி அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டனர்” என்று அவர் மேலும் கூறினார்.
பாரிசான் தலைவரான நஜிப் நாட்டிலுள்ள அனைத்து இந்தியர்களையும் சுப்ரமணியம் ஒன்றுபடுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக மஇகா அதன் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுவது மிக அவசியமானதாகும் என்றாரவர்.
“நாட்டிலுள்ள இந்திய சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்று மஇகா விரும்பினால், அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது அனைத்து இந்தியர்களையும் அதன்குடையின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும்”, என்றார் நஜிப்.
கட்சியுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து ஒற்றுமை பற்றி பேச வேண்டும். அவர்கள் உண்மையிலேயே ஒன்றுபட இயலாவிட்டாலும், எதிர்வரும் தேசிய தேர்தலில் குறைந்தபட்சம் பிஎன் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கான ஓர் அர்த்தமுள்ள, பயன்படத்தக்க கூட்டணியை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நஜிப் மேலும் கூறினார்.
“நான் ஒரு வலுவான மஇகாவை காண விரும்புகிறேன். மஇகா வலுவானதாக முடியும், மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருதின் மூலம்”, என்பதை அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்தால் நாம் வலுவாக இருக்க முடியும். நமக்கு வேண்டியதை நாம் கேட்க முடியும் என்று கூறிய பிரதமார் நஜிப், மஇகா மக்கள் சக்தி போன்ற அரசு சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
சொந்த வீட்டை சுத்தம் செய்துவிட்டு அடுத்தவர் வீட்டைப்பற்றி பேசுவது நன்மைப் பயக்கும். உன் கதைதான் என் கதையும் என்று பாடும், சுப்ரா !
எல்லாம் கண்துடைப்பு
நாங்கள் ம இ கா வை போல் அடிமையாகா இருக்க விரும்பவில்லை .
அடேய் தமிழா இந்த அண்டர் பல்டி நம்ப கமலஹாசன் இந்தியன் படத்தில் பார்த்துடும்டா உன்னால் எத்தனை தமிழன் வேலையில்லாமல் இருக்கிறான் என்று தெரியுமாடா உனக்கு நீ பணம் முழுங்கி மக்கள் பணம் முழுங்கி ………
அம்னோ பொதுப்பேரவையில் அம்னோ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதை மஇகா பொதுக்கூட்டத்தில் மஇகா உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதை பார்த்தால் இந்தியர்களை ‘பென்டாத்தாங்’, ‘கெலிங்’ என்று கூப்பிட மஇகாதான் துணை புரிகிறது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார் பிரதமர்.
மலாய்க்காரர்கள் மனதில் இந்தியர்கள் ‘கெலிங்’ மற்றும் ‘பென்டாத்தாங்’ என்று ஆழமாக விதைத்து விட்டு, இப்பொழுது அப்படி கூப்பிடாதீர்கள் என்றால் என்ன அர்த்தம் ? மா இ கா வேண்டுமானால் உங்களை நம்பலாம் (அவர்களை யாரும் நம்ப மாடடார்கள், அது வேறு விஷயம்) ஆனால் இந்தியர்கள் நம்ப மாடடார்கள்…..
நஜிப் கூறுவது முற்றிலும் உண்மை மலாய் இனத்தவருக்கு. இது இந்தியருக்கு சீனருக்கும் பொருந்தாது. பூமிபுத்ரா ஒராங் அஸ்லியை குறிக்கும். மலாய் இனத்தவரின் புரவீகம் மறைத்து, மற்ற இனத்தவரை சிறுமைபடுத்தி வரலாற்றை ஏமாற்றி வாழ்கின்றனர். உண்மை என்றும் அழியாது. வரலாறு வென்றவர்களால் எழுதப்பட்டது. உலக வரலாறு இரு தரப்பிலும் ஆராய்ந்து பலரால் ஏற்கப்பட்டு எழுதப்பட்டது . அந்த உலக வலராற்றில் தெரியும் இந்தியர்கள், சீனர்கள், ஒராங் அஸ்லி, ஒராங் மேலாயு யாரென்று ….
பிரதமர் இப்படி பேசும்பொழுது சொரணையில்லாத ம.இ.க. மண்டுகள் பலமாக கை தட்டியிருப்பார்களே!
ராமசாமி: முனுசாமி அண்ணே…மஇகா 70 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்துக்குப் போயிட்டு வந்தீங்களா..
முனுசாமி: விடுவெனா, கடந்த 45 வருஷமா தவாறாம போயிட்டு வர்ரேன்லெ..
ராமசாமி: இந்த தடவ அப்படி என்னதான் பேசினாங்க..?
முனுசாமி: இந்த தடவ மட்டும் இல்லே…ஒவ்வொரு தடவையும் என்ன பேசினாங்கன்னு எவனுக்குத் தெரியும். பிரதமர் வருவாரு அவர் பேசறப்ப கை தட்டிக்கிட்டே இருக்கணும்னு சொன்னாங்க செஞ்சேன்..அதே மாதிரி நம்ம தலைவரும் பேசறப்போ கை தட்டிக்கிட்டே இருக்கணும்னு சொன்னாங்க..செஞ்சேன்…ஒவ்வொரு தடவையும் இத தவறாம செஞ்சிடுவேனே..
ரமாசாமி: சொன்னத தவறாம செஞ்சிட்டீங்க போல…அதனாலதான் அவனுங்களும் நம்மல காலம் காலமா செஞ்சிக்கிட்டே இருக்காணுங்க…நாமளும் வசதியா குனிசிஞ்க்கிட்டே இருக்கோம்…
முனுசாமி: ஆமா..நான் மட்டும் இல்லே அங்கே வந்த பாதி பேர் இதை தானே செய்யறோம்…நல்ல சாப்பாடு…தங்கறதுக்கு குளு குளு வசதி..வேற என்ன வேணும்
ராமசாமி: அப்போ சமுதாயம் எப்ப்டிப் போனா என்ன? அப்படித்தானே?
முனுசாமி: சமுதாயமா? அப்படின்னா? அது யாரோட பேரு?
ராமசாமி: ரொம்ப நல்லா கேட்டீங்க அண்ணே…காறித் துப்பினா கூட தை தொடச்சிக்கிட்டு சிரிக்கிற உங்களப் போலவங்க இருக்கற வரைக்கும் இந்த அரசாங்கத்தையும் சரி…அவைங்க போக்கையும் சரி மாத்தவே முடியாது..
ராமசாமி: முனுசாமி அண்ணே…மஇகா 70 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்துக்குப் போயிட்டு வந்தீங்களா..
முனுசாமி: விடுவெனா, கடந்த 45 வருஷமா தவாறாம போயிட்டு வர்ரேன்லெ..
ராமசாமி: இந்த தடவ அப்படி என்னதான் பேசினாங்க..?
முனுசாமி: இந்த தடவ மட்டும் இல்லே…ஒவ்வொரு தடவையும் என்ன பேசினாஙன்னு எவனுக்குத் தெரியும். பிரதமர் வருவாரு அவர் பேசறப்ப கை தட்டிக்கிட்டே இருக்கணும்னு சொன்னாங்க செஞ்சேன்..அதே மாதிரி நம்ம தலைவரும் பேசறப்போ கை தட்டிக்கிட்டே இருக்கணும்னு சொன்னாங்க..செஞ்சேன்…ஒவ்வொரு தடவையும் இத தவறாம செஞ்சிடுவேனே..
அருமை
sothappal! A nice thinkable joke!
பிரதமரின் இந்த கூற்றை செவி மடுத்த அத்தனை ம இ கா வினரும் சொரணையற்ற ஜடங்கள். இவர்கள் நம் இந்திய வம்சசிவலியின் அவமானச் சின்னங்கள்.
பிரதமர் இப்படி பேசியதை ம இக காய் தட்டியது ரொம்ப மகிழ்ச்சி தமிழனுக்கு இது போதும்