சட்டம் 355 (ஹூடுட்) சம்பந்தமாக இவ்வரத்தில் சில திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது குறித்து பிஎன் பங்காளிக் கட்சிகள் விவாதித்து ஒரு ஒப்பந்ததிற்கு வந்துள்ளன. அந்த ஒப்பந்தப்படி பிஎன் கட்சிகள் நடந்துகொள்ளும் என்று தாம் நம்புவதாக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.
“அந்த விவகாரத்தை நாம் எப்படி கையாள்வது மற்றும் என்ன செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பிஎன் விவாதித்துள்ளதோடு ஒரு முடிவு எடுத்துள்ளது” என்று மஇகா 70 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறிய சுப்ரமணியம், “நான் கூற வேண்டிய கருத்து அவ்வளவுதான்”, என்றார்.
ஹூடுட் சட்டத் திருத்த விவகாரத்தில் பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை எப்படி கையாள்வது என்பது குறித்து ஓர் இணக்கம் கண்டிருப்பதாக பல பிஎன் தலைவர்கள் பகிரங்கமாக கூறியிருந்தாலும் அந்த இணக்கம் என்ன என்று அவர்கள் இது வரையில் கூ றவில்லை.
ஒப்பந்தம்!
ஏற்கனவே…கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் “அவருடன்” போட்ட ஒப்பந்தத்தை கால்பந்தாகா போட்டு உதைத்தவர் தானே இந்த நம்பிக்கை நாயகன்.. மறந்து போச்சா சுப்ரா’ண்ணே?
ஹுடுட் விவகாரத்தில் பிஎன் ஒப்பந்தப்படி நடந்தாலும் அல்லது நடந்துகொள்ளாவிட்டாலும் , மா இ கா வால் ஒரு ஆணியையும் அடிக்கவும் முடியாது, புடுங்கவும் முடியாது. இவ்வளவு நாள் ஹூடுட்டை காட்டி நம்மை பயமுறுத்தினார்கள் என்பதே உண்மை. அதற்கு கொஞ்சமும் வெட்கப்படாமல் ஒத்து ஊதியது மா இ கா என்றால், உண்மையே வெட்கப்படும்.