சிகப்புச் சட்டையினரின் வார இறுதி வன்முறை ஒரு ஆரோக்கியமற்ற முன்மாதிரி- சுவாராம் எச்சரிக்கை

suaramசனிக்கிழமை   சிகப்புச்  சட்டை   இயக்கத்தினர்    பெர்சே   பங்கேற்பாளர்களையும்   ஊடக  உறுப்பினர்களையும்    தாக்கிய   சம்பவம்   ஓர்   ஆபத்தான   முன்மாதிரி    என்றும்    அது   உடனே    தடுத்து   நிறுத்தப்பட    வேண்டும்   என்றும்   சுவாராம்   வலியுறுத்தியது.

“அக்டோபர்   15-இல்  சிகப்புச்   சட்டை   இயக்க   ஆதரவாளர்கள்   பெர்சே  5  வாகன    அணி  பங்கேற்பாளர்களைத்   தாக்கியதுடன்    ஊடக   உறுப்பினர்களையும்   பிடித்துத்   தள்ளிய   சம்பவம்    ஓர்  ஆபத்தான  முன்மாதிரியாகும்.

“அவ்வியக்கத்   தலைவர்  (சுங்கை  புசார்   அம்னோ   தலைவர்)   ஜமால்   முகம்மட்   யூனுஸ்   அநியாயமான   வன்முறைகளில்   ஈடுபட்டதற்காக    உடனடியாக    மன்னிப்பு    கேட்பதுடன்   பெர்சே   5   வாகன   அணியைத்   தடம்புரளச்  செய்யவும்   அச்சுறுத்தவும்   மேற்கொள்ளும்   வன்செயல்களை    நிறுத்திக்கொள்ளவும்    வேண்டும்”,  என   சுவாராம்  நிர்வாக   இயக்குனர்   சேவன்  துரைசாமி   இன்று   ஓர்   அறிக்கையில்   வலியுறுத்தினார்.