நேற்றிரவு பெர்சே தலைவர் மரியா சின்னுக்கு வாட்ஸ்அப் வழி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வாட்ஸ்அப் செய்தில் மரியாவுடன் அவருடைய மூன்று மகன்கள், அம்பிகா மற்றும் மன்டீப் சிங் ஆகியோரும் கொலை செய்யப்படுவர் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளாதாக மரியா சின் வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இக்கொலை மிரட்டலைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும் தங்களுடைய அமைதி முறையிலான போரட்டம் தொடரும் என்றும் சூளுரைத்துள்ள மரியா, இக்கொலை மிரட்டல்களுக்கு எதிராக இன்று போலீஸ் புகார் ஒன்று செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இக்கொலை மிரட்டல்களுக்கு எதிரான போலீஸ் புகார் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் (IPD, PJ) இன்று மாலை மணி 5.30 க்கு செய்யப்படும்.
போலீஸ் புகார் செய்யப்பட்ட பின்னர் மாலை மணி 6.30 க்கு பிஜே போலீஸ் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும்.
1969 க்கு பின் பல முறை மே 13 னை காட்டி நம்மை எல்லாம் பயமுறுத்தியத்தின் விளைவு– இந்த நாதாரிகளுக்கு அவ்வளவு திறமையோ புத்தியோ இல்லை என்பதற்கு இப்போதும் எப்போதும் நடக்கும் ஊழல்களும் ஈன செயல்களும் உதாரணம். சம நிலையில் இவன்களால் ஒன்றும் சாதிக்க முடியாது– தில்லு முள்ளு ,திருட்டு , பொய்யும் புரட்டும் ,இன மத,- வழிதான் ஆட்சியையும் அதிகாரத்தையும் குரங்கு பிடியில் வைத்திருக்க முடியும். இவன்கள் தொட்ட எது உருப்பட்டிருக்கிறது? என்ன கருப்பு தங்கம்-எண்ணெய் வழி இந்த நாடு இந்த அளவுக்கு வந்திருக்கிறது. சிங்கப்பூர் மாதிரி ஒன்றும் இல்லாதிருந்தால் நம் கதி ……..?
அப்படியொரு அசம்பாவிதம் நடக்குமனால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தீவிரவாதம் நாட்டில் மிக அதிகமாக தலைத் தூக்கி நிற்க்கிறது.காவல் துறையும் கண்டும் காணாமலும் இருந்து வருகிற்து.