தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சேயில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் ஊடுருவல் இருப்பதாகக் கூறப்படுவதைத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்தார்.
“அப்படி எதுவும் தகவல் இல்லை”, என்றாரவர்.
சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ்தான் அடிக்கடி அப்படிக் கூறி வருகிறார். நவம்பர் 19 பேரணியின்போது பெர்சே விமான நிலையங்கள், புத்ரா ஜெயா ஆகியவற்றைச் சுற்றி வளைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவற்றை இரண்டு வாரங்களுக்குமுன் போலீசில் ஒப்படைத்திருப்பதாவும் ஜமால் யூனுஸ் கூறினார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், சட்டம் பெர்சே, சிவப்புச் சட்டை என்று வேறுபாடு பார்க்காது சரிசமமாக அமல்படுத்தப்படும் என்றார்.
“அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளும். நாங்கள் நிறம் பார்ப்பதில்லை.
“அமைதிப் பேரணிச் சட்டத்தை யார் மீறினாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்”, என்றாரவர்.
இவனுங்களால் மட்டும்தான் இப்படி சிந்திப்பானுங்க
சொல்வதை செய்வது நல்லதுதானே.