மலாக்கா சிஎம்: மலாய் ஆட்சியாளர்கள் குடிமக்கள் பிரகடனத்தை நிராகரித்தார்கள்

idrisடாக்டர்   மகாதிர்  முகம்மட்டும்   அவரின்   கூட்டாளிகளும்   உருவாக்கி   ஒப்படைத்த    குடிமக்கள்   பிரகடனத்தை    ஆட்சியாளர்  மன்றம்   நிராகரித்து   விட்டதாக    மலாக்கா   முதலமைச்சர்    இட்ரிஸ்   ஹருன்   கூறிக்கொள்கிறார்.

இட்ரிஸ்   கடந்த   வாரம்   நடந்த    ஆட்சியாளர்    மன்றக்   கூட்டத்துக்கு     மலாக்கா   ஆளுனர்   முகம்மட்  காலில்   யாக்கூப்புடன்    சென்றதாகவும்   அதனால்   தமக்கு   அது   தெரியும்   என்று   கூறியதாகவும்     பெரித்தா  ஹரியான்    செய்தி   ஒன்று   கூறியது.

“ஆட்சியாளர்   மன்றம்   நஜிப்    அப்துல்  ரசாக்கைப்   பிரதமர்   பதவியிலிருந்து   அகற்ற   வேண்டும்   என்று   கோரிக்கை   விடுக்கும்     மில்லியன்   கையொப்பங்களைக்   கொண்ட    குடிமக்கள்    பிரகடனத்தை      தேசியத்   தலைவர்களைத்   தேர்தல்கள்    வழியாகத்தான்    தேர்ந்தெடுக்க    வேண்டும்   என்று  கூறும்   அரசமைப்புக்கு  முரணானது  என்று  கூறி   நிராகரித்து    விட்டனர்”,  என  இட்ரிஸ்   கூறினார்.

இட்ரிஸுடன்    30   நிமிடம்     என    மலாக்கா   எப்எம்   ஒலியேறிய   நேர்காணல்    நிகழ்ச்சியில்     அவர்  இதனைத்    தெரிவித்தார்    என  பெரித்தான்  ஹரியான்   செய்தி   கூறிற்று.