முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரர் வாட்சன் நியாம்பெக் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது.
18 ஆண்டுகளாக மலேசியாவின் அதிவேக வீரராக திகழ்ந்தவர் வாட்சன். அவரது சாதனை இந்த ஆண்டுதான் முறியடிக்கப்பட்டது. ‘பறக்கும் டயாக்’ என்று போற்றப்பட்டவர் அவர். ஆனால், பெயர் இருந்து என்ன, குடியிருக்க சொந்த வீடு இல்லை அவருக்கு. 2010-இலிருந்து மாமியார் வீட்டில்தான் தங்கி இருந்தார். இப்போது அவருக்கு சரவாக் முதலமைச்சர் அடினாம் சதேமின் உதவியால் புத்தம் புதிய வீடு ஒன்று கிடைத்துள்ளது.
“ஆண்டுத் தொடக்கத்தில் சந்தித்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். அதற்காக, முதலலைச்சருக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்”, என்று வாட்சன் பெர்னாமாவிடம் கூறினார்.
அச்சந்திப்பின்போது, அடினான் நாட்டுக்கும் மாநிலத்துக்கும் செய்த சேவைக்காக என்ன உதவி தேவை என்று வினவினார்.
“ஒரு வீடு தேவை என்றேன். கவனிப்பதாக சொன்னார். இவ்வளவு விரைவில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை”, என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் வாட்சன்.
அவர் அந்தப் புதிய வீட்டில்தான் இவ்வாண்டு கிறிஸ்மசைக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்.
மகிழ்ச்சி– வாழ்த்துக்கள்/
செம்பருத்தி வாசகர்கள் கருத்து தெரிவிக்கும் பகுதியில் திருவாளர்
என் தாய் தமிழ் என்ற அன்பர் அவ்வப்போது கருத்தை பதிவடுவதை
படித்திருக்கிறேன்; பெரும்பாலும் அவர் மற்றவர்களை மரியாதை குறைவாக , நாகரீக மற்ற சொற்களிலேயே திட்டி தீர்ப்பார் ! ஆனால்,,,
இம்முறை மிக கனிவாக இனிமையான சொற்களிலேயே தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்! மகிழ்ச்சி நண்பரே ! தொடரட்டும் இந்த இனிய சொற்கள்.