தமக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தவர்கள் தமது மூன்று மகன்களின் மைகாட் பிரதிகளையும் அனுப்பியுள்ளனர் என்று மரியா கூறினார்.
அவர்களுக்கு எப்படி இந்தப் படங்கள் கிடைத்தன என்பது தமக்குத் தெரியாது என்று கூறிய மரியா, இது அவர்கள் எவ்வளவு துணிச்சல்காரர்கள் என்பதை காட்டுகிறது என்றார்.
“அவர்கள் இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பி எங்களை அச்சுறுத்துகின்றனர்” என்று மரியா பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசிய இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினரிடமிருந்து வந்த அந்த மிரட்டலை மரியா அவரது கைத்தொலைபேசி வழியாக பெற்றார்.
மரியா செய்துள்ள போலீஸ் புகாரின்படி, அந்த அச்சுறுத்தலின் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது: “அல்லா மற்றும் மலேசியாவின் இஸ்லாமிய புனிதப் போராட்டம் ஆகியவற்றின் பெயரால், சிரியாவில் நடப்பதைப் போல் உனது தலையை இழக்க விரும்பினால், உனது முட்டாள்தனமான வேலையைத் தொடர்ந்து செய். நான் உனது தலையை வெட்டி, அதைப் பதிவு செய்து, அதை யுடியூப்பின் வழி பரப்புவேன். நீ யார் என்று எனக்குத் தெரியும். நீ எங்கே குடியிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும் என்பதோடு எனக்கு உனது குடும்பம் மற்றும் குழந்தைகளையும் தெரியும்.”
கடந்த காலத்தில் போலீசார் இது போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் மீது விரைவாக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்திலும் அவரை மிரட்டியவர் யார் என்று போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று மரியா மேலும் கூறினார்.
மரியாவுக்கு அனுப்பட்ட மிரட்டலில் கருப்பு உடையணிந்திருந்த ஒருவன் கத்திமுனையில் அம்பிகாவையும் மன்டீப்படையும் பிடித்திருப்பதும் அடங்கியுள்ளது.
ஐஎஸ்ஸின் பெயரில் மிரட்டல்கள் விடுவது மிகக் கடுமையான செயலாகும் என்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று மரியா நம்பிக்கை தெரிவித்தார்.
அமனா தலைவர் முகம்மட் சாபு மத்தியக் கிழக்கு கலாச்சாரம் இங்கு வேரூன்றுவதை அனுமதிக்கக்கூடாது என்றார்.
ஐஜிபி இந்த மிரட்டலை கடுமையானதாகக் கருத வேண்டும். இது வேரூன்றி விட்டால் அதை அகற்றுவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்றார்.
டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இம்மாதிரியான கூட்டனத்தினர் பரவி விடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும், இவ்விவகாரம் குறித்து எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் போது கேள்விகள் கேட்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு தற்போதைய மற்றும் முன்னாள் பெர்சே தலைவர்களுக்கு முழு நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அம்னோ காவல் என்ன செய்ய போகிறது? வேடிக்கை தான் பார்க்கும்.