பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள 2017 பட்ஜெட், தேர்தல் திடீரென்று நடத்தப்படலாம் என்ற வதந்தி அடிபடுவதால் ஒரு தேர்தல் பட்ஜெட்டாக அமையலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், டாக்டர் மகாதிர் முகம்மட் இந்த பட்ஜெட்டே அர்த்தமற்றது என்கிறார். அரசாங்கக் கருவூலம் பணமின்றி வறண்டு கிடக்கிறதாம்.
“அமைச்சுகளுக்கும் அரசு அமைப்புகளுக்கும் பெரும்பணம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆளும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருப்பதால் பட்ஜெட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
“ஆனால், பட்ஜெட்டை நிறைவேற்ற அரசாங்கத்திடம் பணமில்லை என்பது மக்களுக்குத் தெரியும். பணமில்லை என்பதால் ஒதுக்கப்பட்ட நிதியைவிட குறைவாகவே செலவிட வேண்டும் என்று அமைச்சுகளுக்கு ஈராண்டுகளுக்குமுன்பே கூறப்பட்டிருப்பதையும் அவர்கள் அறிவார்கள்.
“இந்த பட்ஜெட்டே அர்த்தமற்றது. ஏனென்றால் பணமில்லை என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்”, என மகாதிர் இன்று காலை அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
பணமெல்லாம் பிரதமருக்குப் புகழ்தேடிக் கொடுக்கும் திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது என்றாரவர்.
“இதற்காகவே பிரதமர் தம் விசுவாசிகள் பலரை வேலைக்கு வைத்திருக்கிறார். பிரதமர் துறையில் இப்போது ஒன்பது அமைச்சர்களும் மூன்று துணை அமைச்சர்களும் உள்ளனர்.
“51 பிரிவுகள் இருக்கின்றன. பிரதமர்துறைக்கான ஒதுக்கீடு 2000-இல் ரிம5.2 மில்லியனிலிருந்து 2016-இல் ரிம20 பில்லியனாக , நான்கு மடங்கு , உயர்ந்துள்ளது”.
“பிரதமர் பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத அமைப்புகளுக்கும் ஆள்களுக்கும் பணத்தை வாரிக் கொடுக்கிறார் என்றால் அது இந்த ஒதுக்கீட்டிலிருந்துதான் கொடுக்கப்படுகிறது”, என்றாரவர்.
செல்வ சிந்தாமணி வேண்டியர்களுக்கு அல்லி கொடுப்பார் . எதையும் கொடுப்பார் , அதையும் கொடுப்பார் , போதாதென்றால் வாக்குறுதிகளும் வாரி கொடுப்பார் .
நீங்கள் இன்னும் உங்கள் ஆட்சி காலத்தைப்போல் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். தற்கால அரசியல் சூழ்நிலையில் புத்ரா ஜெயாவிடம் பணமில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை அள்ளி கொடுக்கத்தான் வெளிநாட்டு “நன்கொடையாளர்கள்” இருக்கிறார்களே.