சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கைது செய்யப்பட்டதைப் போல் பெர்சே 5 ஏற்பாட்டாளர்களையும் தேசிய நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று அம்னோ எம்பி ஒருவர் கூறியுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே “அரசாங்கத்தை வெறுப்பதற்கு மக்களைத் தூண்டி விடுவது” தெள்ளத் தெளிவாக தெரிந்த ஒரு விசயம்தான் என கோலா சிலாங்கூர் எம்பியான இர்மோகிஸாம் இப்ராகிம் கூறினார்.
“மக்களைப் பிளவுபடுத்தி நாட்டின் அமைதியைக் கெடுக்கும் சம்பவங்களை நிறைய நாம் பார்க்கப் போகிறோம்..
“பெர்சே, எதிரணியினரின் அரசியல் ஆட்டங்களுக்கு ஓர் ஊடகமாக விளங்குகிறது”, என்றவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பண்ணும் அநியாயம் எல்லாம் உன் ஈன அம்னோ ஆனால் தட்டிக்கேட்டால் அவர்கள் நீதி இல்லாத சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்- என்னடா உன் நியாயம். உன்னுடைய தகுதி என்னடா? இப்படி பேசி மந்திரி ஆகலாம் என்றா?
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்களை இனவாரியாக பிளவுபடுத்தி, மற்ற இனத்தை இழிவு படுத்தி, எதெற்கெடுத்தாலும் மே13-ஐ சுட்டிக்காட்டி மக்களை அச்சுறுத்தி, ஒரு இனத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அரசாங்க அலுவல்களில் ஊழலை ஊக்குவித்து, தங்கள் தவறுகளை மறைக்க அந்நியர் ஆதிக்கத்தை அதிகரித்து, நாட்டின் அமைதியை அலங்கோல படுத்தி, அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் “மக்களை பிளவுபடுத்தி நாட்டின் அமைதியை கெடுக்கும்” என உளறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
பாஜு மேரா உம்னோவின் கூலிப்படை என்று சொல்லலாம் அல்லவா?
எல்லாருக்கும் அது தெறிந்தது தானே. பணம் படுத்தும் பாடு.