1எம்டிபி ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறியிருப்பது சட்டப்படி சரியல்ல என்கிறார் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம்.
“அதை விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது.
“எது எப்படியோ, அமைச்சரின் மறுமொழி டிஓஜே வழக்கில் ஒரு கேள்விப்பட்ட சான்றாகத்தான் கருதப்படும் என்பதால் ஏற்றுக்கொள்ளப்படாது. அமைச்சர் வழக்கில் நேரடியாக அளிக்கும் சாட்சியமே ஏற்றுக்கொள்ளப்படும்”, என மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகம்மட் ஹிஷாமுடின் முகம்மட் யூனுசிடம் மலேசியாகினி கேட்டபோது அவரும் இதில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விவகாரமே இல்லை என்றுதான் சொன்னார்.
ஐயா கோபால் ஸ்ரீராம் அவர்களே – இந்த மாதிரி கேனையன்கள் தான் இன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கின்றனர் — உங்கள் காலம் எல்லாம் -நியாயம் எல்லாம்- மலை ஏறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது . இதுதான் இன்றைய போலெஹ் லேண்ட் –
இப்போது பதவியில் இருப்பவர் என்ன சொல்கிறாரோ அது தான் சட்டம், அது தான் நீதி அனைத்தும்! அதனால் நீங்கள் முன்னாளாகவே இருங்கள்!
இங்கே சட்டபடி எது சரியாக நடக்கிறது ?