மரியா, “இசிக்கு எதிரான பொய்களை நிறுத்துங்கள்”, தேர்தல் ஆணையத்தின் தலைவர் கூறுகிறார்

ecfairதேர்தல்கள்  நேர்மையாக நடக்கின்றன, அது பெர்சேயிக்குத் தெரியும் என்கிறார் மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர்.

மலேசியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்று தொடர்ந்து கூறிய வரும் நேர்மையான தேர்தல் வேண்டும் என்று கோரிவரும் பெர்சே அமைப்பை மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா கடுமையாக விமர்சித்தார்.

இந்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் நடைமுறைகளைக் கவனிப்பதற்கு வாக்குப்பதிவு பரிசோதகர்களை நியமிக்கின்றன என்று மிங்குவான் மலேசியா டுடேயில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அங்கு எப்படி ஏமாற்றுதல் இருக்க முடியும்? இசிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்றானது அது சில வாக்குப் பெட்டிகளைத் திருடி விட்டது என்பதாகும். பாரங்களின் வழி முடிவுகள் பட்டியல்படுத்தப்பட்ட பின்னர் ( வாக்களிப்பு அறைகளில்) வாக்குப் பெட்டிகள் ஒரு பொருட்டல்ல என்று அவர் கூறுகிறார்.

“ஆகையால், கேள்வி இதுதான்: மரியா சின் வேண்டுமென்றே பாசாங்கு செய்து மலேசியாவில் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் உட்பட, நேர்மையாக நடத்தப்படுகின்றன என்பதை ஏற்க மறுக்கிறாரா?

“மலேசியா எதிர்க்கட்சிகளின் ஆட்சிக்குட்பட்ட பின்னர்தான் (தேர்தல்) முறை செயல்படுகிறது என்றும் நேர்மையானது என்றும் அவர் ஒப்புக்கொள்வாரா?, என்று முகமட் ஹசிம் எழுதியுள்ளார்.

எந்த அரசாங்கம் வேண்டும் என்று வாக்காளர்கள் செய்த முடிவை பெர்சே மதிக்க வேண்டும். வெறித்தனமாக நடந்துகொள்ளக்கூடாது என்று மேலும் கூறினார்.

“மரியா சின் இவ்வளவு வெறித்தனத்தோடு இருக்கக்கூடாது. அவர் இசியைக் குறைகூற விரும்பினால், அவர் கூறுவதில் உண்மை மட்டும் இருந்தால், அப்போதுதான் நமக்கு பிரச்சனை உண்டாகிறது.

“மக்களுக்கு மதிப்பு அளியுங்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய அரசாங்கத்திற்கு மதிப்பு அளியுங்கள். இசிக்கு எதிரான பொய்களை நிறுத்துங்கள்”, என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பெர்சே 5 எதிர்வரும் நவம்பர் 19 இல், பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும் கோரும் ஒரு மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.