கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து வழக்காட பெர்சே தலைவர் மரியா சின்னுக்கு அனுமதி வழங்கியது.
பயணத் தடையை நீதிமுறை மேலாய்வு செய்ய வேண்டும் என்ற மரியா சின்னின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக நீதிபதி ஹஸ்மத் நிக் முகம்மட் தீர்ப்பளித்தார்.
“அவரது விண்ணப்பம் அடாவடித்தனமானதோ விளையாட்டுத்தனமானதோ அல்ல என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது”, என்றாரவர்.
தீர்ப்பளிக்குமுன்னர் அடிக்கடி செய்திகளில் பரப்பப்பூட்டிக் கொண்டிருக்கும் மரியா நீதிமன்றம் வந்துள்ளாரா என்று வினவிய நீதிபதி, அவரைப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
நீதிபதி பெர்சே தலைவருக்கு ரிம3,000 செலவுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
கையால் ஆகாத நாதாரிகளுக்கு அடக்கு முறை தான் ஆயுதம்– உண்மையிலேயே அறிவு இருந்தால் வெளிப்படை விவாதம் செய்து தன்னுடைய நியாயத்தை நிரூபிக்கலாமே? அறிவு இருந்தால் தானே– அரைவேக்காடுகள் அதிகாரத்தில் ஒளிந்து கொண்டு ஆட்டம் போடுகின்றன.