பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடக்கும் பழுதுபார்க்கும் பணிகள் ஆண்டு இறுதிவாக்கில் முடிவுக்கு வரும் எனக் கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.
டிஏபி-இன் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். என். ராயர், அக்கட்டிடத்தில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதையும், கற்கள் உதிர்ந்து விழுவதையும் சுட்டிக்காட்டியதை அடுத்து அது இவ்வாறு தெரிவித்தது.
“அவ்விவகாரத்துக்கு முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். குத்தகையாளர்கள் அமர்த்தப்பட்டு பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 2016 இறுதிக்குள் வேலைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது”, என்று அதன் அறிக்கை கூறிற்று.