இவ்வாண்டு தீபாவளிக்கு நீண்ட விடுமுறை இல்லை என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள்.
நீண்ட விடுமுறையை விரும்பும் அவர்கள் அதற்காக இணையத்தில் மாணவர்- மகஜர் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். மலாய், சீன மாணவர்கள் உள்பட 1,400-க்கு மேற்பட்டோர் அதில் கையொப்பமிட்டுள்ளனர்.
காப்பார் எம்பி ஜி.மணிவண்ணனும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்தார். மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“இப்போது அவர்களுக்கு ஒரு வார இறுதி மட்டும்தான். ஒரு நாள் குடும்பதோடு இருப்பார்கள், மறுநாள் பல்கலைக்கழகம் புறப்பட வேண்டும்.
“இது மாணவர்களூக்கு எதிரான ஒருவகை பாகுபாடுதான்”, என்று மணிவண்ணன் கூறினார்.
படிக்கிற காலத்துலே படிக்க வேண்டியது தானே ….ஏறக்குறைய ஒரு நான்கு வருடம் அப்டி இப்டி’னு விடுமுறை எடுக்க முடியாது…..இதுக்கு பெயர்தான் தியாகம்….. கல்விக்கு தியாகம் ….படித்த பிறகு ….ஏறக்குறைய 40 வருடம்……எப்படி வேணும்னாலும் விடுமுறை எடுக்கலாமே…..எது எதுக்கு கொடி பிடிக்கணும் என்று விவஸ்த வேணாமா ????
all work and no play makes a dull boy- அத்துடன் நாம் ஓரம் கட்டப்பட்ட சமூகம்-வேறு ஒன்றும் இல்லை– அப்படியானால் மலாய்க்கார/முஸ்லீம் பெருநாட்களுக்கு ஏன் நீண்ட விடுமுறை?
சிவாகணபதி, தங்களின் கருத்துக்கு நன்றி, என் தாய் தமிழ், முதலில் தமிழில் எழுதுங்கள், உங்கள் தாய் தமிழ் கோபித்துக்கொள்ள போகிறார்.
(நாம் ஓரம் கட்டப்பட்ட சமூகம்-வேறு ஒன்றும் இல்லை– அப்படியானால் மலாய்க்கார/முஸ்லீம் பெருநாட்களுக்கு ஏன் நீண்ட விடுமுறை? ) இந்த நாட்டில் இந்துகள்ள 6.3%, (இரண்டு பொதுவிடுமுறை – தீபாவளி, தைப்பூசம்) முஸ்லீம்கள் 61.3% . மலேசியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் -மலாய்க்கார/முஸ்லீம் பெருநாட்களுக்கு நீண்ட விடுமுறை இருப்பினும் எத்தனை பேர் தங்கள் பெருநாளை தனது குடும்பம், உற்ற உறவினர்களுடன் கொண்டாடமல் பணி செய்கிறார்கள் ( விடுமுறை கிடைப்பதில்லை). இராணுவத்தில், போலீஸ்சில், சிறையில், இமிகீரேசன், மருத்துவமனையில், பஸ் ஒட்டுநனர்கள், வெளி நாடுகளில் மேற் கல்வி பயில்வோர்கள் என்று இன்னும் பலர். இதனை கருத்தில் எடுத்துக்கொண்டால் சிவாகணபதி கருத்து வரவேற்க தக்கதே. நாம் தீபாவளி தேர்வு காலத்திலே வருகிறது. இதற்கு சரியான தீர்வு, நமது மலேசிய இந்து சங்கம், அரசாங்கத்தில் நமது பிரதிநிதியாக இருக்கம் ம.இ.கா வழி ஆண்டு தொடக்கத்திலே அந்த ஆண்டு தீபாவளி தேதியினை கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் வாயிலாக தெரிய படுத்தினால் அவர்களும் அதனை கருத்தில் கொண்டு தேர்வு அட்டவணையினை தயாரிக்க முடியும். மலேசிய இந்து சங்கம், ம.இ.கா கவனிப்பார்களா? 2016ம் ஆண்டு தீபாவளி கொண்டாடும் இந்துகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள், சிறப்பாக சிந்தித்து, சிறப்பாக வாழ்வோம்