2017 பட்ஜெட்டில் 36 விழுக்காடு அரசாங்க ஊழியர் சம்பளத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் அரசு ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால், எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால்கூட அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.
அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் சிவில் சேவையினர் ஆத்திரமுறுவர். அரசாங்கச் செயல்பாடுகள் முடங்கி விடும் என்றாரவர்.
“சிவில் சேவையில் ஐந்து விழுக்காடு ஆள்குறைப்பு செய்தாலும் எஞ்சிய 95 விழுக்காட்டினர் ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே, அது உகந்த ஒரு முடிவல்ல.
“அது அநியாயமான சுமைதான். வேறு வழியின்றி தாங்கிக் கொள்ள வேண்டியதுதான்”, என நேற்று “பட்ஜெட் 2017 பகுத்தாய்வு” கருத்தரங்கில் பேசியபோது புவா கூறினார்.
மலேசியாவில் 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் உள்ளனர். 32 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டுக்கு இந்த எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.
அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் சிவில் சேவையினர் ஆத்திரமுறுவர். அரசாங்கச் செயல்பாடுகள் முடங்கி விடும் என்றாரவர்.
“சிவில் சேவையில் ஐந்து விழுக்காடு ஆள்குறைப்பு செய்தாலும் எஞ்சிய 95 விழுக்காட்டினர் ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே, அது உகந்த ஒரு முடிவல்ல.
மேலே நீங்கள் சொன்னது உண்மை என்றால் இதற்கு தீர்வு தான் என்ன? ஆள்குறைப்பு செய்தால் எஞ்சியுள்ளவர்கள் ஒத்துழைக்க வில்லை என்றால் அவர்களை வேலையிலிருந்து தூக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள், எருமைகள் எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஒரே இன ஆதிக்கம் அரசு அலுவலகங்களில் இருப்பதால் அங்கே போட்டி ஆற்றல் மிகக் குறைவு. வேலையில் சோம்பல்..அண்டை நாட்டில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ‘நம்மவர்களை’ அங்கே கற்றுகொள்ள அனுப்பினால் அவர்களுக்கும் இவர்கள் ‘இதை’ கற்றுக்கொடுத்து விடுவார்கள். (‘மாஸ்’ இதற்கு நல்ல எடுத்துக் காட்டு) இதற்கு ஒரே தீர்வு ‘அரசாங்கத்தை’ தனியார் மயமாக்கிவிடலாம்.
மலேசியாவில்1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் உள்ளனர்.
32 மில்லியன் மக்களை கொண்ட ஒரு நாட்டுக்கு இந்த எண்ணிக்கை அதிகம் என்று கூறுவது எதிர்க்கட்சி ஆனால் ஆளும் கட்சிக்கோ ஆதரவு ஒட்டு அல்லவா ஆகவே 2017 பட்ஜெட்டில் 36 விழுக்காடு அரசாங்க ஊழியர் சம்பளத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதுகூட குறைவுதான் என்றும் ஆளும் கட்சியினர் வாதாடலாம். ஆளும் கட்சிக்கு சேவையை பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒட்டு + ஊழல் நன்கொடைதான் முக்கியம்.