அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களிலும் (ஜிஎல்சி) அரசாங்கத்தின் துணை நிறுவங்களிலும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாண்டு வேலை இழந்தனர்.
இவர்களில் 5134 பேர் ஜிஎல்சிகளைச் சேர்ந்தவர்கள் என நிதி அமைச்சு கூறியது.
மலேசிய விமான நிறுவனத்திலிருந்து 4,682 பேர் பணிநிறுத்தம் செய்யப்பட்டனர். அந்நிறுவனம் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்(எம்ஏபி) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட பின்னர் மேலும் இருவர் விலக்கப்பட்டனர்..
இது தவிர ஆள்குறைப்பு செய்த மற்ற ஜிஎல்சிகள் வருமாறு: அஃப்பின் குழுமம் (146); பெளஸ்டட் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்(151); கெமிகல் கம்பெனி அப் மலேசியா (153).
நிதி அமைச்சின்கீழ் உள்ள நிறுவனங்களிலிருந்து 1,036 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பெட்ரோனாசிலிருந்து 1,000 பேர், அக்ரோபேங்கிலிருந்து 36 பேர்.
GLC-யில் வேலை இழந்தால் என்ன அதுதான் சிவப்பு/கருப்பு சட்டையினர் இருக்கிறார்களே. அவர்களோடு இணையாலாமே.
சிவப்பு/கருப்பு சட்டை இயக்கமும் அரசாங்கத்தின் GROUP OF COMPANIES தானே !