நேற்றிரவு குவாந்தான் பிகேஆர் எம்பி புசியா சாலேயின் சேவை மையத்தின்மீது யாரோ சிவப்புச் சாயத்தை வீசியடித்திருந்தனர். அது பெர்சே-எதிர்ப்பாளர்களின் செயலாக இருக்கலாம் என்றவர் நினைக்கிறார்.
இரவு மணி 11.36க்கு மோட்டார்சைக்கிள் தலைகவசம் அணிந்த இருவர் சாயத்தை வீசியடிப்பதைக் சிசிடிவி படங்கள் காண்பிப்பதாக அவர் தெரிவித்தார்.
“அது ஒரு மிரட்டலாக இருக்கலாம், செயல்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால், நான் அதைக் கோழைகளின் அநாகரிமான செயல் என்றுதான் சொல்வேன்.
“கண்ணியமானவர்களாக இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும். ஆ லோங்(கடன் வசூலிப்பாளர்கள்)போல் நடந்து கொள்ளக்கூடாது. ஆ லோங்குகள் இப்படித்தான் மக்களை மிரட்டுவார்கள்”, என்றாரவர்.
பெர்சே எதிர்ப்பு இயக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் புசியா நினைக்கிறார்.
இது போன்ற மட்டரக புத்தி யாருக்கு இருக்கும் என்று எனக்கு தெரியாது -காவலுக்கு தெரியாது–அப்படியானால் யாருக்கு தெரியும்? இதுதான் இன்றைய கலாச்சாரம்.