மாறுபட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் சமையல் எண்ணெய் விலையில் எந்த மாற்றமுமில்லை. அது பழைய விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும்.
இதனை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று புத்ரா ஜெயாவில் அறிவித்தார்.
சிறப்பாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அமைச்சர், “சமையல் எண்ணெய் ஒரு கிலோ கிராமுக்கு ரிம2.50 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
இது உண்மைத் தகவலா அமைச்சரே? கடந்த சில ஆண்டுகளாக 5 கிலோ சமையல் எண்ணெயை ரி.ம.14.70 க்கு வாங்கிக் கொண்டிருந்தோமே? கூடுதலாக கொடுத்த விலையை (விலை வித்தியாசத்தை) எப்படி எப்போது திரும்பத் தருவீர்கள்?
எந்த சமையல் எண்ணெய் என்பதில் தான் குழப்பம்! அமைச்சருக்கு அந்த விலையில் கிடைக்கும். ஆனால் மற்றவர்களுக்கு?