இப்போது, குவான் எங்கிற்கு எதிராக 1000 கருப்புச் சட்டையினர் பேரணி நடத்தினர்

 

blackshirts2இன்று பிற்பகல், சுமார் 1000 கருப்புச் சட்டை அணிந்திருந்த இளைஞர்கள் பினாங்கு அம்னோ கட்டடத்திலிருந்து கோம்தாருக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பதவி துறக்க வேண்டும் அல்லது விடுப்பில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விட்டனர்.

பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் ரபிஸால் அப்துல் ரஹிம் தலைமையில் சென்ற அக்கூட்டம் பிரதமர் நஜிப்புக்கு அவர்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.

பிற்பகல் மணி 2 அளவில் தங்களுடைய பயணத்தைத் தொடங்கிய அந்த அம்னோ இளைஞர் பிரிவினர் “குவான் எங், பதவியிலிருந்து விலகு, பெர்சேயை அழி” என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

கொம்தாரை வந்தடைந்ததும் 13 பினாங்கு அம்னோ இளைஞர் தொகுதிகள் கையொப்பமிட்டிருந்த 2 பக்க மகஜரை முதலமைச்சர் லிம்மின் உதவியாளர் ஸஹார் ஸைனோலிடம் கொடுத்தனர்.

லிம் பதவியிலிருந்து விலகும் அல்லது விடுப்பில் செல்லும் வரையில் போராட்டம் தொடரும் என்று ரபிஸால் கூறினார்.blackshirts1

மஞ்சள் சட்டையினர் நவம்பர் 19 இல் கோலாலம்பூரில் நடத்த திட்டமிட்டிருக்கும் பேரணியை நிறுத்த வேண்டும் என்றும் ரபிஸால் வலியுறுத்தினார்.

மஞ்சள் சட்டைக்காரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கே சிவப்புச் சட்டைக்காரர்கள் இருப்பார்கள் என்றாவர்.

சிவப்புச் சட்டை அணியாமல் ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ” இந்தக் கூட்டத்தினர் மஞ்சள் சட்டைகளைத் தவிர்த்து மற்ற அனைவரையும் பிரதிநிதிக்கிறது என்று கூறினார்.

சுமார் 30 நிமிடங்கள் வரையில் நடந்த அக்கூட்டம் அமைதியாகக் கலைந்து சென்றது.