ஜோகூர் பாரு சுல்தானா மருத்துவமனை(எச்எஸ்ஏ) தீவிர கவனிப்புப் பிரிவின் தீ விபத்துக்கு மின்கம்பிகளில் ஏற்பட்ட தீப்பொறிகள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதே காரணத்தால்தான் அடுத்த நாள் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை பிரிவில் மின்கசிவும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையைப் பராமரிக்கும் பொறுப்பு பந்தாய் மெடிவெஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.
மருத்துவமனை பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு அதனுடையது. அதற்காக அடிக்கடி சோதனைகள் நடத்திப் பார்க்க வேண்டும். அதே பணியைச் செய்வதற்காக அமைச்சிலும் ஒரு சிறப்புப் பணிக் குழு இருப்பதாக அவர் சொன்னார்.
ஆக இரு பணிக்குழுக்கள் இருந்தும் பயனில்லை. இருவருமே ஒரு வேலையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. அரை வேக்காடுகளுக்கெல்லாம் முழுதாக எதையும் செய்யத் தெரியாது!
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தான் ஆ ஊ என்று பெரிய ஆர்ப்பாட்டம்– இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறடி தான்– எதையும் ஒழுங்காக செய்யும் கலாச்சாரம் இங்கு கிடையாது –எப்போதுமே இப்படித்தான்– காரணம் நான் சொல்லி தெரிய தேவை இல்லை–
இத்தீவிபத்து சுகாதார அமைச்சர் கூறும் அந்த சிறப்பு பணி குழு “திறமையற்றது” என்பதை நிரூபித்து விட்டது.
நாட்டில் எங்கேயாவது மண்சரிவு அல்லது மலைச்சரிவு ஏற்பட்டால் உடனே நாடெங்கிலும் உள்ள மலைகள் பரிசோதிக்கப்படும் என்பார்கள். உடனே அதை மறந்து விடுவார்கள்.
ஏதாவது ஒரு பள்ளிச்சிற்றுண்டிச் சாலையில் உணவு விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டால் உடனே எல்லாப் பள்ளிச் சிற்றுச்சாலைகளையும் சோதிக்க வேண்டும் என்பார்கள்..பிறகு அது காற்றில் போய்விடும். என்றாவது அதிக அளவில் சாலைவிபத்து நடந்தால் உடனே எல்லா சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படும் என்பார்கள். பின் அதுவும் ‘அம்பேல்’ ஆகிவிடும். அடுத்து ஏதாவதொரு விமான நிலையத்தில் ஏதேனும் பொருள் கடத்தப்படுவது இசகு பிசகாக பிடிபட்டால் உடனே நாட்டில் எல்லா விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்பார்கள். பின் அதுவும் அதே கதிதான்.
அதேபோல இந்த மருத்துவமனை விபத்துக்குப் பிறகு வந்த அறிவிப்பும் காற்றினிலே போன கீதம் தான்.
இந்த மருத்துவ மனை விபத்தில் காயம் பட்டோருக்கு வழங்கப்படவிருக்கும் உதவித்தொகை எவ்வளவு என்று தெரிந்ததும்…அடேயப்பா….அடுத்து சமையல் எண்ணெய் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று சொன்னார்கள். உடனே சமையல் எண்ணெய் பதுக்கப்பட்டு விட்டது என்றார்கள். உதவித் தொகை நிறுத்தப்படுவதற்கும் விநிதோகஸ்தர்கள் சமையல் எண்ணெயை பதுக்குவதாக்ச சொல்லப்படுவதற்கும் என்ன சம்மந்தம்? சரிதான் என்று தலையாட்டுவதற்கும் ஆமாம் சாமி போடுவதற்கும் மக்கள் தயாராக இருந்தால் இவர்கள் கேழ்வரகில் கூட சமையல் எண்ணெய் தயாரிப்பார்கள்.