மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்த தாயிடம் போலீஸ் விசாரணை

studentபள்ளிக்கூடம்    செல்ல    மறுத்த   மகளை   ஒரு   தாயார்  இரும்புச்  சங்கி   கொண்டு விளக்கு கம்பத்தில் கட்டிப்போடப்பட்டதாக   நம்பப்படும்   விவகாரம்மீது      போலீஸ்   விசாரணை   நடத்தி   வருகிறது.

எட்டு  வயது  இந்திய   பள்ளிமாணவி  பள்ளி உடையணிந்த   நிலையில்   விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டுள்ள     செய்தி    கிடைத்ததும்    மோட்டார்-சைக்கிள்   போலீசார்    அந்த   இடத்துக்கு   விரைந்து   அனுப்பப்பட்டனர்     என   சுபாங்   ஓசிபிடி(முகம்மட்   அஸ்லின்   சடாரி)  கூறினார்.

“அவர்கள்   சம்பந்தப்பட்ட   இடத்தை   அடைந்தபோது   பொதுமக்கள்   கூட்டமாக  கூடியிருந்தனர்”,   என்றாரவர்.

10 நிமிடம்  கழித்து   அச்சிறுமியின்   தாயார்   வந்தார்.  பள்ளிக்கூடம்   செல்ல   மறுத்தால்   மகளைச்  சங்கிலியால்   கட்டிப்போட்டதை  அவர்  ஒப்புக்கொண்டார்   என  அஸ்லின்   கூறினார்.

சிறுமியை  விடுவித்த  போலீசார்   அவரையும்   அவரின்  தாயாரையும்    விசாரணைக்காக   சுபாங்   ஜெயா   மாவட்ட   போலீஸ்   தலைமையகத்துக்கு   அழைத்து   வந்தனர்.

விசாரணை  முடிந்து    தாயார்   விடுவிக்கப்பட்டதாக   த   ஸ்டார்    தெரிவித்தது.

போலீசார்   சிறுவர்  சட்டம்  பகுதி  31(1) (ஏ) இன்கீழ்   இந்த  விவகாரத்தை  விசாரணை    செய்து    வருகிறார்கள்.

ஒரு  கம்பத்தில்    பள்ளிமாணவி   சங்கிலியால்   கட்டப்பட்டிருக்கும்   படம்  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு   வருகிறது.  பெற்றோர்  மகளிடம்   இவ்வளவு   கடுமையாக   நடந்து   கொண்டிருப்பதை நெட்டிசன்கள்   பலரும்    கடிந்து  கொண்டார்கள்.