யுனிசெப்: சீரியாவில் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார் பலி

syriaசீரியாவின்  வடமேற்கில்   ஒரு   பள்ளிக்கூடம்    அருகில்    நடத்தப்பட்ட   வான் தாக்குதலில்   கொல்லப்பட்டவர்களில்   22   பேர்   சிறார்கள்   என    ஐநா   சிறுவர்  நிதி  நிறுவன(யுனிசெப்)த்   தலைவர்  ஆலன்  லேன்   தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களில்  ஆறு   ஆசிரியர்களும்  உள்ளிட்டிருந்ததாக    அவர்   சொன்னார். அதேவேளை   சீரிய   மனித  உரிமை   கண்காணிப்பு   மையம்    அத்தாக்குதலில்   மொத்தம்    35 பேர்   பலியானதாகக்    கூறியது.

“இது  மிகப்  பெரிய  துயரச்   சம்பவம்.   இது    திட்டமிட்ட    தாக்குதல்   என்றால்       போர்க்காலக்   குற்றச்செயலாகும்”,  என்று   லேன்  ஓர்   அறிக்கையில்  கூறினார்.

“ஐந்தாண்டுகளுக்குமுன்    தொடங்கிய   போரில்,   ஒரு  பள்ளிமீது   நடந்துள்ள    இத்தாக்குதலே   மிகக்   கோடூரமானதாகும்”,  என்றார்.

“பலியான   சிறார்கள்  அனைவரும்  பள்ளி  மாணவர்கள்.  தாக்குதல்   நடத்தியவை   ரஷ்ய   விமானங்கள்    என்று  கருதப்படுகின்றன”,  என  சீரிய  மனித  உரிமை     கண்காணிப்பு  மையத்   தலைவர்    ரமி   அப்டெல்-ரஹ்மான்   கூறினார்.