தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே கூட்டமைப்பு அதன் ஐந்தாவது பேரணியை நவம்பர் 19-இல் டட்டாரான் மெர்டேகாவில் நடத்தும் என அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
சிகப்புச் சட்டை இயக்கத்தினரும் பினாங்கு அம்னோ இளைஞர்களும் பேரணியை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் பெர்சே பேரணியை நடத்துவதில் உறுதியாக உள்ளது.
“இடம் டட்டாரான் மெர்டேகாதான்”, என்று மரியா கூறினார்.
ஆனால், பேரணி குறித்து மேல்விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள் என்று கூறிவிட்டார்.
இதனிடையே, பெர்சே துணைத் தலைவர் ஷாருல் அமான் முகம்மட் சாரி, பெர்சே போராட்டத்துக்கு பெருமனத்துடன் நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பெர்சே 5 பேரணி, வாகனத் தொகுதிகள், தேர்தல் எல்லைச் சீரமைப்புத் திட்டம், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்காடுதல், பெர்சேயின் நடைமுறைச் செலவுகள் போன்றவற்றுக்கு சுமார் ரிம500, 000 தேவைப்படுவதாக அவர் சொன்னார்.