கைருடின் பெர்சத்துவிலிருந்து வெளியேறினார்

 

khairuddin quitsமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் துணிச்சலான ஆதரவாளர் கைருடின் அபு ஹசான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)விலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

பெர்சத்துவிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால் அவர் அக்கட்சியில் சேரப்போவதில்லை பல தடவைகளில் கூறியுள்ளார். அவர் எப்போது அக்கட்சியில் சேர்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தாம் பிரதமர் நஜிப்புக்கு எதிராகத் தொடர்ந்துள்ள பல வழக்குகளில் கவனம் செலுத்துவதற்காக கட்சியிலிருந்து வெளியேறிதற்கு காரணம் என்று கைருடின் விளக்கம் அளித்துள்ளார்.

பெர்சத்துவை இன்னொரு அம்னோவாக்கி விடாதீர்கள் என்று கட்சி ஆதரவாளர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

அம்னோ கலாச்சாரத்தை பெர்சத்துவில் ஊடுருவ அனுமதிக்காதீர்கள் என்று கூறிய கைருடின், கட்சியில் ஒற்றுமையும் தலைவருக்கு விசுவாசமும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

எனினும், தாம் தொடர்ந்து பெர்சத்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் போவதாகவும் ஆனால் அது தனிப்பட்டமுறையில் ஆகும் என்று கைருடின் மேலும் கூறினார்.