ஐஜிபி: சிவப்புச் சட்டையினர் தெரியப்படுத்தினார்கள்; பெர்சே இன்னும் இல்லை

igpநவம்பர்   5-இல்   டட்டாரான்   மெர்டேகாவ்ல்   பேரணி    நடத்தப்போவது  குறித்து    சிவப்புச்  சட்டை   இயக்கத்திடமிருந்து    அறிவிக்கை   கிடைத்திருப்பதாக   போலீஸ்   தெரிவித்தது.

அப்பேரணியின்   நோக்கத்தை    அறிய  போலீசார்   அவர்களை    அழைத்து   விசாரிப்பார்கள்   என    இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்   கூறினார்.

எந்தத்  தரப்பும்   அமைதிப்  பேரணிச்   சட்டத்தின்படி    பேரணி   நடத்துவதை    போலீஸ்   ஆட்சேபிக்காது     என்றாரவர்.

“பேரணி   நடத்த   விரும்புகிறீர்களா,   தாராளமாக   நடத்துங்கள்.  அமைதிப்   பேரணிச்   சட்டம்   அதற்கு   இடமளிக்கிறது.  ஆனால்,  அதைச்  சட்டத்திற்கிணங்க    நடத்த   வேண்டும்”,  என்றவர்   இன்று    கோலாலும்பூரில்      தெரிவித்தார்.

இதனிடையே,     நவம்பர்   19 பேரணி   குறித்து   பெர்சே    இதுவரை   போலீசுக்குத்   தெரியப்படுத்தவில்லை    என்று  காலிட்   கூறினார்.

பேரணி  குறித்து   முன்கூட்டியே   போலீசாருக்குத்   தகவல்   தெரிவிக்காவிட்டால்   ஏற்பாட்டாளர்களுக்கு   எதிராக   நடவடிக்கை   எடுக்கப்படும்    என்று  அவர்   எச்சரித்தார்.

-பெர்னாமா