சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், நவம்பர் 19 பெர்சே பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சிவப்புச் சட்டை இயக்கத்தின் 300 ஆயிரம் பேர் ஒன்றுதிரள உறுதி அளித்துள்ளதாகக் கூறிக் கொள்கிறார்.
அது உண்மையாயின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத பெர்சே பேரணிக்குக் கூடிய கூட்டத்தைவிட அது மும்மடங்கு அதிகமாக இருக்கும்.
“பெர்சே பேரணியைத் தடுத்து நிறுத்த நாங்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டோம்.
“என்னைப் பொறுத்தவரை, எங்களை இரத்தத்தில் குளிப்பாட்டினால்கூட எங்கள் போராட்டம் தொடரும்”, என ஜமால் நேற்றிரவு சிலாங்கூர் அம்னோ தலைமையகத்தில் கூறினார்.
கடந்த சனிக்கிழமை காப்பாரில் ஒரு கூட்டத்திலும் ஜமால் இதேபோல்தான் பேசினார். பின்னர், அவரே “இரத்தக் குளியல்” என்றால் சிவப்புச் சட்டையினர் இரத்தம் சிந்த ஆயத்தமாக இருப்பதைக் குறிக்கும் என்றும் மற்றவர்களை இரத்தம் சிந்த வைப்பது என்று அது பொருள்படாது என்றும் விளக்கமளித்தார்.
இதுநாள்வரை 1MDB பணம் குறைத்துக் கொண்டிருந்தது. இனிமேல் கடிப்பேன் என்கின்றது. தலையாடாது, வாலாடாது.