பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராகக் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது என்பதைக் காரணம்காட்டி அவரை விடாப்பிடியாக ஆதரிக்கும் பிஎன் எம்பிகளைக் கபடதாரிகள் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விளாசினார்.
நஜிப்பை எந்தக் குற்றத்துக்காகவும் குற்றம் சாட்ட முடியாது என்பதை அம்னோ, மசீச உள்பட பிஎன்னில் உள்ள எல்லாக் கட்சிகளுமே நன்கு அறியும். அவரது குற்றச்செயல்கள் நீதிமன்றம் செல்வதைத் தடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
“நஜிப் குற்றவாளி என்று தீர்மானிக்கப்படவில்லை என்பதால் அவரைப் பிரதமராக ஏற்பதாய் அவர்கள் கூறும் காரணம் அடிப்படையற்றது.
“அவர்கள் தங்களுக்குத் தாங்களே பொய்யுரைக்கிறார்கள். மக்களிடமும் பொய் சொல்கிறார்கள். எல்லாருமே கபடதாரிகள்.
“இந்தப் பொய்யை மெய்யாக்குவதில் நஜிப்புக்கு உறுதுணையாக நிற்கும் கபடதாரிகளான எம்பிகளையும் சமூகத் தலைவர்களையும் பெற்றிருப்பது மலேசியாவின் துரதிர்ஷ்டமாகும்”, என்று மகாதிர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
நஜிப்புக்கு எதிராக பல ஆதாரங்கள் உண்டு என்று மகாதிர் கூறிக்கொண்டார். நஜிப்பின் வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் இருந்ததும் அரசாங்கத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து ரிம42 மில்லியன் மாற்றிவிடப்பட்டதும் அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி மீது நடத்தும் விசாரணையும் தக்க ஆதாரங்களாகும் என்றாரவர்.
BN எம்பிக்கள் அநியாயமான கபடதாரிகள் என உங்கள் ஆட்சியின் போதே காதுக் கிழிய கத்தினோமே, அப்போதே காதில் விழவில்லையா, மகாதிமிரே!
கபடதாரிகளின் தந்தை தங்கள்தான்…..