சுவிட்ஸர்லாந்து சட்டத்துறை தலைவர் (ஒஎஜி) பண மோசடி மற்றும் நாணயச் சலவை ஆகியவற்றில் 1எம்டிபி சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் பரஸ்பர சட்ட உதவி திட்டத்தின் கீழ் மலேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் உதவி கோரியிருப்பதை மலேசிய அட்டர்னி ஜெனரல் முகம்மட் அபாண்டி அலி உறுதிப்படுத்தினார்.
மலேசிய எஜியிடமிருந்து சுவிஸ் எஜி பரஸ்பர சட்ட உதவி திட்டத்தின் கீழ் உதவி கோரியிருப்பது இது இரண்டாவது முறையாகும். ஆனால். மலேசிய எஜி அலுவலகம் முதல் கோரிக்கையைப் பெறவில்லை என்று கூறியிருந்தது.
அக்டோபர் 6 இல், சுவிஸ் எஜி இரண்டாவது கோரிக்கையை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
“நாங்கள் (கோரிக்கையை) பெற்றுள்ளோம். அதற்கான பதில் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களிடம் இன்று கோலாலம்பூரில் அபாண்டி கூறினார்.