அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்தியதாக முகைதின் மீது போலீஸ் புகார்

 

official secretpolicereportmade1எம்டிபி சம்பந்தப்பட்ட “அரசாங்க இரகசியங்களை” வெளிப்படுத்தியதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜாரிங்கான் மெலாயு மலேசியா (ஜேஎம்எம்) தலைவர் அஸ்வான்டின் ஹம்சா செய்துள்ள புகாரில் முகைதின் யாசின் இரண்டு சம்பவங்களில் – இவ்வாரம் நாடாளுமன்றத்தில் மற்றும் இம்மாத தொடக்கத்தில் ஒரு செராமாவில் – இதைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முகைதின் அதிகாரப்பூர்வமான இரகசியங்கள் சட்டத்திற்கு (ஒஎஸ்எ) எதிராகச் செயல்பட்டுள்ளார், ஏனென்றால் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இரகசியமாக இருக்க வேண்டும் என்று அஸ்வான்டின் தமது புகாரில் கூறியுள்ளார். மலேசியாகினி அப்புகாரின் நகல் ஒன்றை பெற்றிருக்கிறது.

முகைதின் யாசினின் நடவடிக்கைகள் மிகக் கடுமையானதாகக் கருதப்பட வேண்டும் ஏனென்றால் அவை மக்களை தூண்டிவிடுவதற்குச் சமமானதாகும் என்றாரவர்.

கினிடிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் முகைதினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டது ஏனென்றால் அவர் தெரிவித்த கருத்துகளில் சிலவற்றை அவர்  நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பதை அஸ்வான்டின் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், இன்றைய போலீஸ் புகார் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, முகைதினும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் ஹுஸ்னியும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2017 விவாதத்தின் போது இரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி இருக்கலாம் என்று கூறிய பின்பு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, அக்டோபர் 1 இல், திரங்கானுவில் முகைதின் ஆற்றிய உரையில் கூறியிருந்தது குற்ற தண்டனை தொகுப்பு செக்சன் 499 இன் கீழ் அவதூறு குற்றமாகும் என்று அஸ்வான்டின் மேலும் கூறினார்.