மரியா சின் சாபாவில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

MariaarrestedinSabahபெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா துண்டுப் பிரசுரங்களை லாங்கூன், கோத்தா மருடுவில் விநியோகம் செய்ததற்காக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று பெர்சே அதிகாரி ஒருவர் டிவிட்டர் செய்துள்ளார்.

விசாரிக்கப்படுவதற்காக கோத்தா மருடு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பெர்சே துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு வந்த மற்றவர்களையும் கைது செய்யப் போவதாக போலீசார் மிரட்டினர் என்று பெர்சே தரப்பில் கூறப்பட்டது.

மரியா தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் போலீஸ் நிலையத்திற்கு வெளியில் பெர்சே ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவர்கள் “மரியாவை விடுவி” என்ற வாசகத்தைக் கொண்ட மஞ்சள் நிற அட்டைகளை ஏந்தி நின்றனர்.

பெர்சே இயக்கம் பெர்சே 5 பேரணியை நவம்பர் 19 இல் நடத்துவதற்கு நாடளவில் ஏற்பாடு செய்து வருகிறது.