அனைவருக்கும் சமமான உரிமைகள், உறுதிப்படுத்துகிறார் ஸாகிட்

 

Zahidmodelஒற்றுமைக்கு மலேசியா ஒரு முன்மாதிரி ஏனென்றால் அனைத்து இனங்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் வரையறுத்து ஒப்புக்கொண்டுள்ளபடி அது நியாயமான மற்றும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துகிறது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

ஆகவே, நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் தங்களுடைய சமயங்கள் மற்றும் பாரம்பரியங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. தங்களுடைய அடையாளங்களை இழந்து விடுவோம் என்ற கவலையே வேண்டியதில்லை.

“நமது வேறுபட்ட சமயங்கள், மொழிகள் மற்றும் தோல் நிறங்கள் நம்மை மதிப்பு வாய்ந்த பாரம்பரியங்களைக் கொண்ட நாடாக்கியுள்ளது.

“மலேசிய நாட்டை உருவாக்குவதில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில், இந்த வேறுபாடுகள் பெரும் சக்தியாக இருந்தன, ஒரு பலவீனமாக அல்ல”, என்று நேற்று அவரது முகநூல் மற்றும் டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டு நிமிட வீடியோ செய்தியில் அவர் கூறியுள்ளார்.

இது தீபாவளி விழாக்காலமாதலால், துணைப் பிரதமர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பரச் சார்புடமையையும் வலுப்படுத்த வேண்டும், ஏனென்றால் அவைதான் நாட்டின் மேம்பாட்டின் முதுகெலும்பு என்றார்.

சமூக ஊடகத்தை நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் சாதனமாக்கிவிட வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக ஆனால் முக்கியமாக,  அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு, தீபாவளி 2016 நல்வாழ்த்துகளை துணைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

 

-பெர்னாமா.