பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உரிய நேரத்தில் வருமான வரியைச் செலுத்தி விடுவதாக பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் சேமரனும் செய்ததுபோல் நஜிப்பும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் அவர்கள் செலுத்திய வருமான வரியைப் பகிரங்கமாக அறிவித்தது உண்டா என்று டாக்டர் கோ சங் சென் எழுத்துப்பூர்வமாகக் கேட்டிருந்த கேள்விக்கு அஸலினா இவ்வாறு பதிலளித்தார்.
அவர்கள் நன்கொடை அளித்த விவரத்தைப் பொதுவில் அறிவித்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளவும் டாக்டர் கோ விரும்பினார்.
“நஜிப் வருமான வரி வாரியத்தின் கணக்கீட்டின்படி ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி கட்டத் தவறுவதில்லை.
“தலைவர்கள் எதற்கு நன்கொடை அளிக்க விரும்புகிறார்களோ அதற்குக் கொடையளிப்பது அவர்களின் உரிமை”, என அஸலினா சுருக்கமாகப் பதிலளித்தார்.
2.6 பில்லியனுக்கு வருமான வரி செலுத்தியாச்சா?
நாட்டில் பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் வருமான வரியா செலுத்துகிறார்கள் ? நான் எடுத்த பிச்சைக்கு மட்டும்
வருமான வரி செலுத்த சொல்வது நியாயமா ? என பிரதமர் எதிர் கேள்வி கேட்பார். பிரதமர் கேட்பதும் நியாயம்தானே. பிச்சை எடுப்பதில் பிரதமரா இருந்தா ? என்ன சாதாரண மக்களா இருந்தா என்ன ? சட்டம் அனைவருக்கும் சமமே !
எந்த எந்த நாட்டுல ?