துவான் இப்ராகிம்: போலீசார் விசாரிக்க வேண்டியது 1எம்டிபி-யை, ஹுஸ்னியை அல்ல

husniபோலீசார்   1எம்டிபி   ஊழலைத்தான்   விசாரிக்க    வேண்டுமே   தவிர   அஹமட்  ஹுஸ்னி   ஹனாட்ஸ்லா   போன்ற   முன்னாள்   அமைச்சர்களை   அல்ல   என்று   பாஸ்   துணைத்   தலைவர்   துவான்   இப்ராகிம்   துவான்  மான்   கூறினார்.

“ஹூஸ்னியை  விசாரிப்பதில்   நேரத்தையும்   சக்தியையும்  விரயமடிக்க   வேண்டாம்    என்று  பாஸ்   போலீசுக்குக்  கூறிக்கொள்ள   விரும்புகிறது.

“அதற்குப்   பதில்,  போலீசார்    நீண்ட  காலமாக    தாமதப்பட்டுக்  கிடக்கும்  1எம்டிபிமீதான   விசாரணையைத்   தொடங்க   வேண்டும்”,  என  துவான்  இப்ராகிம்   இன்று   ஓர்   அறிக்கையில்    வலியுறுத்தினார்.

போலீசார்,  வாக்குமூலம்   பெறுவதற்காக,   ஹுஸ்னியை   1எம்டிபி   ஊழல்  பற்றிய   செய்தி  வெளிவந்தபோது   இரண்டாம்  நிலை  நிதி  அமைச்சராக   இருந்த    ஹுஸ்னியை    அழைத்திருக்கிறார்கள்.

ஹூஸ்னி,  கடந்த    வாரம்   நாடாளுமன்ற   விவாதத்தின்போது   அமைச்சரவைக்கு    மட்டுமே   தெரிந்த   1எம்டிபி   தொடர்பான  இரகசியத்   தகவல்களைக்  கசிய  விட்டார்    எனப்  புகார்கள்   செய்யப்பட்டதை    அடுத்து    போலீசார்   அவரை   விசாரணைக்கு    அழைத்திருக்கிறார்கள்.