ஒரு மில்லியன் சிலாங்கூர் மக்களுக்கு இலவச மருத்துவ உதவி: அஸ்மின்

azminசிலாங்கூர்   மாநில    அரசு,    குறைந்த   வருமானம்   பெறும்  பி40  தரப்பினருக்கு  இலவச  மருத்துவ   உதவி   அறிமுகப்படுத்தப்படும்    என  அதன்  2017  பட்ஜெட்டில்    அறிவித்துள்ளது.  இதன்வழி   அம்மாநிலத்தில்   10  ஆண்டுகளுக்குமேல்   வசித்துவரும்    சுமார்   1 மில்லியன்  பேர்  பயனடைவார்கள்.

அத்தரப்பினர்   உயர்ந்து  வரும்   மருத்துவச்  செலவுகளைச்  சமாளிக்க  முடியாமல்   தவிப்பதால்  “Skim Peduli Sihat”  என்னும்   இந்த  மருத்துவக்  கவனிப்புத்   திட்டம்    கொண்டு   வரப்படுவதாக   மந்திரி   புசார்   அஸ்மின்   அலி   கூறினார்.

“இத்திட்டத்துக்காக    ஆண்டுதோறும்  ரிம125 மில்லியன்   ஓதுக்கப்படுகிறது.  இதன்வழி,     சிலாங்கூரில்    ரிம3,000-த்துக்கும்   குறைவாக   மாத   வருமானம்   பெறும்      250,000  குடும்பங்களுக்கு   அதாவது   ஒரு   மில்லியன்   பேருக்கு    இலவச   மருத்துவச்  சேவை   வழங்கப்படும்”,  என்றாரவர்.