பிடிபிடிஎன்னிடம் கடன் வாங்கியவர்களில் 753,000 பேர் சல்லிக்காசுகூட திருப்பிச் செலுத்தவில்லை

ptptnதேசிய   உயர்க் கல்விக்  கடனுதவி    நிறுவன(பிடிபிடிஎன்)த்திடம்    கடன்  வாங்கியவர்களில்   753,058   பேர்   கடனைப்  பெற்றதோடு   சரி,   வாங்கிய   கடனில்   ஒரு   காசைக்கூட   திருப்பிக்  கொடுத்ததில்லை.  இதனால்   ரிம5.191 பில்லியன்   வராக்  கடனாக     உள்ளது    என    உயர்க்  கல்வி   அமைச்சர்   இட்ரிஸ்   ஜூசோ   இன்று  மக்களவையில்    தெரிவித்தார்.

“முன்னாள்    மாணவர்களிடமிருந்து    ரிம18. 311 பில்லியன்  வர   வேண்டியிருந்தது.

“ஆனால்,  திரும்ப  வந்தது  ரிம9.6 பில்லியன்  மட்டுமே”, என்று   ஒரு  கேள்விக்குப்  பதிலளித்தபோது    அமைச்சர்   கூறினார்.

இன்னும்  வர  வேண்டியது   ரிம8.710 பில்லியன்.  இதில்   ரிம5.191 பில்லியன்  செலுத்த   வேண்டிய   753,058   மாணவர்கள்   கடனுக்காக   இதுவரை   ஒரு  காசுகூட    கொடுத்ததில்லை.  எஞ்சியுள்ள   ரிம3.518  பில்லியன்      இன்னும்  கட்டி   முடிக்கப்படாமலிருக்கும்   கடன்பாக்கியாகும்.