மலேசியாவில் 18வயதுக்குக் குறைந்த 290,437 சிறார்கள் நாடற்றவர்கள் எனத் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.
மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள சிறார் எண்ணிக்கை குறித்து என்.சுரேந்திரன் (பிகேஆர்- பாடாங் செராய்) வினவியதற்கு ஜாஹிட் இவ்வாறு பதிலளித்தார்.
“மலேசியாவில் பிறந்த ஒரு வயதுக்கும் 18வயதுக்கும் இடைப்பட்ட 290,437 பேர் நாடற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படவில்லை.
“இவர்கள் அனைவரும் வெளிநாட்டவர். இவர்கள் இனவாரியாக பிரிக்கப்படவில்லை. அவர்களின் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த அடிப்படையில் அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் இந்தோனோசியா, பிலிப்பீன்ஸ்,, மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்”, என்றாரவர்.
இது கணக்கில் வந்தது. இன்னும் கணக்கில் வராத இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார் மற்றும் பங்களாதேஷ் சிறார்கள் என்னாவது?