நாட்டின் தலைவர்கள்- அரசாங்கத்தில் உள்ள இப்போதைய தலைவர்களும் சரி, அரசாங்கத்தில் இருந்துவிட்டு விலகிச் சென்றவர்களாக இருந்தாலும் சரி, பணி ஓய்வு பெற்றவர்ளாக இருந்தாலும் சரி- அனைவரும் 1972 அதிகாரத்துவ இரகசிய சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்களே என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி.
ஏனென்றால், அவர்கள் எல்லாருமே அரசாங்க இரகசியங்களைக் காப்பதாக உறுதிமொழி எடுத்து கொண்டிருப்பவர்கள் என்றாரவர். ஜாஹிட் இன்று, ‘Being Abdullah Ahmad Badawi – The Authorised Biography’ என்ற தலைப்பில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“எம்பிகளுக்கு நாடாளுமன்றச் சலுகை உண்டு என்றாலும், ஓஎஸ்ஏ இரகசியங்கள் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் உள்பட, அரசாங்க இரகசியங்களை வெளியிடக்கூடாது”.
இதைத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது என்று ஜாஹிட் வலியுறுத்தினார்.
நீதிமன்றத்திற்கு போய் பார்ப்போமே!. தைரியமிருந்தால் அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வாருங்கள். சும்மா புலி வருது, புலி வருதுன்னு சொன்ன கதையெல்லாம் போதும்.
வெளிநாட்டினரிடம் நன்கொடை என்று நீங்கள் எடுக்கும் பிச்சைகூட “ஓஎஸ்ஏ இரகசியங்கள்” என முத்திரை குத்தி விட்டீர்கள் போலிருக்கிறது.